பதிவு செய்த நாள்
07
செப்
2018
12:09
புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி நெருங்கிவிட்ட நிலையில், புதுச்சேரியின் பல பகுதிகளில், பல் வேறு வகையான வடிவங்களில், பிரம்மாண்ட விநாயகர் சிலை தயாரிக்கும் பணி விறுவிறு ப்பாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 13ம் தேதி, நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. வீடுகள் மட்டுமின்றி, பொது இடங்களில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், நலச்சங்கங்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படும்.
அதையொட்டி, வில்லியனூர் பிள்ளையார்குப்பம், கணுவாப்பேட்டை, அரியாங்குப்பம், மொரட்டாண்டி உள்ளிட்ட பல இடங்களில் 6 அங்குல உயரம் முதல் 20 அடி உயரம் வரையில், பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. சிலைகள் ரூ. 30 முதல், ரூ. 20 ஆயிரம் வரை விற்பனைக்கு உள்ளன.
பாகுபலி விநாயகர், சிவசக்தி கணபதி, மயில் வாகன விநாயகர், கற்பக விநாயகர், தாமரை விநாயகர், நந்தி விநாயகர், ரிஷப விநாயகர், திருமூர்த்தி விநா யகர், பஞ்சமூர்த்தி விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், ஜல்லிக்கட்டு விநாயகர், விவசாய விநாயகர் என, பல்வேறு வடிவங் களில் விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகை யில், ரசாயனம் கலக்காமல், காகிதக் கூழ், கிழங்கு மாவு, களிமண் உள்ளிட்ட கலவையால் சிலை தயாரிக்கப்படுகிறது. மேலும், கடல்வாழ் உயிரினங்களை பாதிக்காத வகையில், வாட்டர் கலர் கொண்டு, விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் தீட்டுவதாகவும், நீர்நிலைகளில் விஜர்சனம் செய்யும்போதும் இந்த விநாயகர் சிலைகள் எளிதில் கரைந்துவிடும் என, சிலை தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். புதுச்சேரியில் தயாராகும் விநாயகர் சிலைகள், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.