பதிவு செய்த நாள்
07
செப்
2018
12:09
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஓரிக்கையில், நவதுர்க்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் ஓரிக்கை, சர்வோதயா நகர், ராஜன் நகர் விரிவு குடியிருப் போர் நலச்சங்கம் சார்பில், அப்பகுதியில் புதிதாக நவதுர்க்கையம்மன் கோவில் கட்டப்பட்டது. மேலும், மஹா கணபதி, பச்சையம்மன், படவேட்டம்மன், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர், முனீஸ்வரர் மற்றும் நவக்கிரகங்களுக்கு தனித்தனி சன்னிதியும் கட்டப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக தினமான நேற்று (செப்., 6ல்) காலை, 5:30 மணிக்கு கோ பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. யாக சாலை மண்டபத்தில் இருந்து, காலை, 9:00 மணிக்கு கலச புறப்பாடு துவங்கியது. 9:05 மணிக்கு, கோபுரம் மற்றும் நவ துர்க்கையம்மனுக்கும், அதை தொடர்ந்து பரிவார தேவதை களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், எஸ்.தாஸ், எஸ்.டில்லி பாபு, ஜெ.கே.ஜி.சதீஷ் மற்றும் பலர் செய்து இருந்தனர்.