வத்திராயிருப்பு சந்தனமாரியம்மன் கோயிலில் பொங்கல்விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2018 12:09
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சந்தன மாரியம்மன் கோயில் பொங்கல் விழா விமரிசையாக நடந்தது. முதல்நாள் காப்புக்கட்டு வைபவத்துடன் விழா துவங்கியது. பக்தர்கள் கரகம் எடுக்கும் நிகழ்சி நடந்தது. அன்புபிரியாள் கோவிலில் இருந்து கரக அம்மன் செய்யப்பட்டு ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது.
பெண்கள் பாதபூஜை செய்து அம்மனை வரவேற்றனர். அம்மன் உற்ஸவ மண்டபத்தில் எழுந்தருளினார்.2ம் நாளில் பெண்கள் கோயில் முன் முளைப்பாரி வைத்து கும்மி வழிபாடு செய்தனர். 3ம் நாள் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மாலையில் பக்தர்களின் முளைப்பாரி ஊர்வலம் மஞ்சள் நீராட்டு வைபவம் நடந்தது.
ஏராளமான பெண்கள் முளைப்பாரி, சிலைகள், மஞ்சள்நீரை சுமந்தபடி நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு கரகம் கரைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அம்மனை நீரில் கரைப்பதற்காக பக்தர்கள் எடுத்துச் சென்றனர்.
பெண்கள் பூக்களை தூவி வழியனுப்பினர். 4ம் நாளில் பள்ளயம் பிரித்தலும், கரூர் ஆதித்யா கல்யாண ராமன் ஆன்மிக சொற்பொழிவும் நடந்தது. வணிக வைசியர் உறவின் முறை நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்தனர்.