அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2018 03:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மூன்று மாதங்களுக்கு, ஒரு முறை தீயணைப்பு துறையினரால் தணிக்கை செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து, பணியாளர்களுக்கு, தீத்தடுப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. நேற்று, மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் குமார் தலைமையில், ஆய்வு நடந்தது. தொடர்ந்து கோவில் ஊழியர்களுக்கு தீ ஏற்படும் காலங்களில் அவசர கால உதவிக்கு உடனடியாக செய்யவேண்டிய பணிகள், தீத்தடுப்பு பணிகள் குறித்து, செயல்முறை செய்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. கோவில் இணை ஆணையர் ஞானசேகர் உள்ளிட்ட கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.