பாலக்காடு : செம்பை வைத்தியநாத பாகவதரின் 122வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கேரளா பாலக்காட்டில் நடந்த சங்கீத உற்ஸவம் நேற்று (செப்., 10ல்) நிறைவடைந்தது.
பாலக்காடு செம்பை பார்த்தசாரதி கோவில் கலையரங்கில் நேற்று முன்தினம் (செப்., 8ல்) துவங்கிய விழாவில் 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் சங்கீத ஆராதனை நடத்தினர். நிறைவு நாளான நேற்று (செப்., 10ல்) காலை 11:45 மணிக்கு, பாகவதரின் சீடர் மண்ணூர் ராஜாகுமாரன் உண்ணியின் கச்சேரி நடந்தது.மதியம் 1:00 மணிக்கு செம்பை வித்யா பீடத்தின் 33வது ஆண்டு மாநாட்டை ஜூ எம்.பி., துவக்கி வைத்தார். மிருதங்க வித்வான் குழல்மன்னம் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கேரள சங்கீத நாடக அகாடமி செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.