வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை சர்ச் திருவிழாவில் தேர் பவனி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2018 12:09
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை சர்ச் திருவிழா ஆக.,29 கொடியேற்றத்துடன் துவங்கியது.
முக்கிய நிகழ்வாக தேர் பவனி நேற்று முன் தினம் (செப்., 8ல்) மாலை நடந்தது. மாலை திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் நற்கருணை ஆராதனை, முப்பெருவிழா, கூட்டுத் திருப்பலி நடத்தது.
நேற்று (செப்., 9ல்) பங்குதந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் நற்கருணை ஆராதனையுடன் கொடியிறக்கம் நடந்தது. ஏற்பாடுகளை எஸ்.வி.டி.நிர்வாகி ஜோசப், உதவி பங்கு தந்தை யூஜின் டென்சிங், நிர்வாகி அகஸ்டின்காரமல் மற்றும் விழா குழுவினர் செய்தனர்.