உளுந்தூர்பேட்டையில் பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் ஆவணி அமாவாசை நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2018 01:09
உளுந்தூர்பேட்டை: பாதூர் அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் நடந்த நிகும்பலா யாகததில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசையொட்டி நேற்று (செப்., 9ல்) நிகும்பலா யாகம் நடந்தது. காலை 10:30 மணிக்கு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து யாக குண்டத்தில் பழங்கள், நெய் ஊற்றப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது.
கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள் ஆசியுடன் 5 குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு யாகம் வளர்க்கப் பட்டது.
பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கோரி எழுதிய வெற்றிலையை யாக குண்டத்தில் கொட்டினர். பின்னர் யாக குண்டத்தில் புடவைகளும், தாலி, வளையல்கள் சாற்றப்பட்டன. அதனை தொடர்ந்து பழ வகைகள், பால், தயிர், நெய் யாக குண்டத்தில் கொட்டப்பட்டு தீபாரதனை நடந்தது.
தொடர்ந்து அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.