பதிவு செய்த நாள்
10
செப்
2018
02:09
வீரபாண்டி: சேலம் - கோவை நெடுஞ்சாலை, நெய்க்காரப்பட்டியில், சாலையோரம், 10க்கும் மேற்பட்ட இடங்களில், வடமாநிலத்த வர்கள், சிலை தயாரிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சதுர்த்தி நெருங்குவதால், அங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை, தெற்கு தாசில்தார் சுந்தர்ராஜன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், நேற்று, ஆய்வு செய்தனர். பின், சுந்தர்ராஜன் கூறுகையில், சிலைகள், தண்ணீரில் கரையக்கூடிய காகித கூழ், களிமண்ணால் மட்டுமே தயாரிக்க வேண்டும். எளிதில் கரையும் மை, வாட்டர் கலர் போன்றவற்றை பயன்படுத்தி அழகுபடுத்த வேண்டும். இதுகுறித்து, ஆய்வு நடந்தது, என்றார்.