பதிவு செய்த நாள்
10
செப்
2018
01:09
சேலம்: அழகிரிநாதர் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. சேலம், கோட்டை, அழகிரிநாதர் கோவிலில், கோகுலாஷ்டமி விழா, கடந்த, 2ல் தொடங்கியது. நாளை (செப்., 11ல்) வரை நடக்கும் விழாவில், தினமும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
நேற்று (செப்., 10ல்), திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, வேணுகோபால சுவாமி, ராஜ அலங்காரத்தில், மணமேடையில் எழுந்தருளினார். தொடர்ந்து, ருக்மணி, சத்தியபாமா சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம் செய்து, வேதமந்திரங்கள் ஓத, மாலை மாற்றும் வைபவம் நடந்தது. பின், மணக்கோலத்தில் காட்சியளித்த ருக்மணி, சத்தியபாமா சமேத வேணுகோபாலசுவாமியை, ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். அவர்களுக்கு, மஞ்சள் கயிறு, குங்குமம், தேங்காய், பழம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.