உப்பூர் விநாயகர் கோயிலில் இன்று (செப்., 12ல்) மாலை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2018 12:09
உப்பூர்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் தேரோட்டம் இன்று (செப்., 12ல்) மாலை நடைபெறுகிறது.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா செப்.4 ல் கொடியேற்றுத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு வாகனங்களில் விநாயகர் வீதி உலா நடைபெற்றது. விழாவின் எட்டாம் நாளான நேற்று (செப்., 11ல்) விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவின் தொடர்ச்சியாக இன்று (செப்., 12ல்) மாலை 3:30 மணிக்கு தேரோட்டமும், அதைத் தொடர்ந்து நாளை (செப்.,13ல்) காலை 9:00 மணிக்கு சதுர்த்தி தீர்த்தவாரியும் நடைபெற்று, கோயில் முன்பு பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதுடன் விழா நிறைவடைகிறது.