பதிவு செய்த நாள்
13
செப்
2018
12:09
கோவை: விநாயகர் சதுர்த்தி தினமான இன்று, கோவையில் 1,347 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில், கோவை ராஜவீதி தேர்நிலை திடலில், 15 அரை அடி உயரத்துக்கு, நவதானிய விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பிள்ளையார் பீடம் பொன்மணிவாசக அடிகள், காமாட்சிபுரி ஆதினம் சாந்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள் முன்னிலை வகிக்கின்றனர். இந்து முன்னணி சார்பில், பூமார்க்கெட் தெப்பக்குளம் மைதானத்தில், 12 அடி உயரத்துக்கு வெற்றி விநாயகரும், விஸ்வஇந்து பரிஷத் சார்பில், ஆர்.எஸ்.புரம். லைட்ஹவுஸ் வீதியில், 14 அடி உயர விநாயகரும், சின்னவேடம்பட்டியில், அனுமன் சேனை சார்பில் 13 அடி உயர விநாயகர் சிலையும், பிரதிஷ்டை செய்யப்படுகிறது. விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படும் குறிச்சி, முத்தண்ணன், பேரூர், சிங்காநல்லுார் குளங்களுக்கு மூங்கில் தடுப்புகள், ராட்சத மின்னொளி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளன.: