திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் காவடி எடுத்து நேர்த்தி கடன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2012 10:02
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சி அளித்த இடமான கம்பத்து இளையனார் சன்னதியில் ஆண்டுதோறும் ஆடி மற்றும் தை கிருத்திகை விழா கோலாகலமாக நடக்கும். நேற்று முன்தினம், தை கிருத்திகையொட்டி கம்பத்து இளையனாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து மாட வீதியில் வலம் வந்தனர். * திருவண்ணாமலை வட வீதி சுப்பிரமணிய ஸ்வாமி கோவில், சோமாசிப்பாடி சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், வில்வாரணி முருகன் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.