வத்திராயிருப்பு : வத்திராயிருப்பை சேர்ந்த முருகபக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையை துவக்கினர். சேதுநாராயணபுரத்தில் விநாயகர் கோயிலில் வழிபாடு முடித்த பக்தர்கள், கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயிலில் வழிபாடு முடித்த பக்தர்கள் அனைவரும் வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயிலுக்கு வருகை தந்தனர். அங்கு சிறப்பு பூஜை, வழிபாட்டிற்கு பின் குருநாதர்கள் சக்திவேல், முனியாண்டி, ரவி சுவாமிகள் தலைமையில் பயணத்தை தொடங்கினர்.