திருப்பரங்குன்றம் : கோயிலில் ஜன. 24ல் கொடியேற்றத்துடன் துவங்கிய இவ்விழாவில் தினமும் ஒரு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதவை தெப்பம் முன், சுவாமி எழுந்தருளினார். அங்கு யாகம் வளர்க்கப்பட்டு, அரிவாள், உளி, கத்தி ஆகியவற்றிற்கு பூஜைகள் நடந்தன. 16 கால் மண்டபம் அருகே சிறிய வைரத் தேரில் சுவாமி எழுந்தருள, ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு மிதவை தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி தெப்பத் திருவிழா நடந்தன. இரவு 8 மணிக்கு சொக்கநாதர் கோயில் முன் சூரசம்ஹார லீலை நடந்தன. தங்க குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய வாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.