பதிவு செய்த நாள்
14
செப்
2018
02:09
புதுச்சேரி: மொரட்டாண்டி ஸ்வர்ண சிதம்பர மஹா கணபதிக்கு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது.
புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் விஸ்வரூப மஹா சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள, ஸ்வர்ண சிதம்பர மஹா கணபதிக்கு, சீதாராமன் மற்றும் மகாலட்சுமி சீதாராமன் குடும்பத்தார், ரூ. 5 லட்சத்தில் தங்கக்கவசம் அளித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியான நேற்று (செப்.,13ல்), மகா கணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை களுக்கு பிறகு, தங்கக் கவசம் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.
லலிதாம்பிகை வேதசிவாகம் டிரஸ்ட் தலைவர் சிதம்பர குருக்கள், துணைத் தலைவர் சீதா சங்கர குருக்கள், செயலாளர் கீதாராம குருக்கள் பூஜைகள் செய்தனர்.