Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் தெப்பத் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுத்தமல்லி விலக்கு ஜெய்மாருதி கோயிலில் 6ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 பிப்
2012
11:02

திருநெல்வேலி:சுத்தமல்லி ஜெய்மாருதி கோயிலில் ராஜகோபுர கும்பாபிஷேகம் வரும் 6ம் தேதி நடக்கிறது.சுத்தமல்லி விலக்கு கோபாலசமுத்திரம் ரோடு ஜெய்மாருதி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 27 நட்சத்திரத்தை குறிப்பிடும் வகையில் 27 அடி உயரத்திலும், 12 லக்னத்தை குறிப்பிடும் வகையில் 12 அடி அனுமன் சிலையும், 9 கோள்களை குறிக்கும் வகையில் 9 அனுமன் சிலைகளுடன் 3 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தில் ராமபிரானின் பட்டாபிஷேக திருக்கோலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஸ்ரீ ராமஜெயம் பொறிக்கப்பட்டுள்ள செங்கற்களால் கோபுரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. கோடி கணக்கில் ராமஜெயம் எழுதப்பட்டு அவையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.இக்கோயில் கும்பாபிஷேக விழா நாளை (4ம் தேதி) தேவதா அனுக்கை, மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. தொடர்ந்து கணபதிஹோமம், நவக்கிரஹ ஹோமம், நட்சத்திர ஹோமம், லக்ன பூஜை, அஷ்டதிக் பூஜை, பிரவேச பலி, சுதர்ஸன ஹோமம், புன்யாக வாஜனம், பஞ்சகவ்ய பூஜை, அஷ்டதிக் பூஜை, குருபீட பூஜை, பூர்ணாஹூதி, திவ்யபிரபந்தம், தேவார இசை, தீபாராதனை நடக்கிறது.மாலையில் பேட்டை செக்கடி சந்தன மாரியம்மன் கோயிலில் இருந்து புண்ணிய நதி தீர்த்த ஊர்வலம், கங்கா பூஜை, யாகசாலை பிரவேசம், பாலிகா பூஜை, ரக்ஷா பந்தனம், பஞ்சசூக்த பாராயணம், திவ்யபிரபந்தம் நடக்கிறது.5ம் தேதி காலை முதல் கால யாகசாலை பூஜை, துர்கா, லெட்சுமி, சரஸ்வதிஹோமம், சுதர்ஸன ஹோமம், லெட்சுமிநாராயணர் பூஜை, தஜபுஜ காளி பூஜை, சுகல சூக்த பாராயணமும், மாலையில் 2ம் கால யாகசாலை பூஜை, ராமர் சீதா திருக்கல்யாணம், ராமநாம பாராயணம், யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தனம், பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம், மங்கள இசை நடக்கிறது.6ம் தேதி காலை 3ம் கால யாகசாலை பூஜை, வேதிகா பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கும்பம் எழுந்தருளல், நடக்கிறது. காலை 9.13 மணிக்கு மேல் 9.43 மணிக்குள் மீன லக்னத்தில் விமான கும்பாபிஷேகம், சுவாமி ஜெய்மாருதி, மகா கணபதி, தஜபுஜ காளி மற்றும் பரிவார தேவதைகளுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.கும்பாபிஷேகத்தை ஜெய்மாருதிதாசன், நாராயணன் குழுவினர் நடத்திவைக்கின்றனர். மதியம் மகேஸ்வர பூஜை, அன்னதானமும், பிரசன்ன பூஜை, தீபாராதனை நடக்கிறது.ஏ.எல்.என்.விஜயலெட்சுமி, தொழிலதிபர் சங்கர், ரமாசங்கர், நாராயணசாமி முன்னிலை வகிக்கின்றனர்.ஏற்பாடுகளை ஆலய ஸ்தாபகர் ஜெய்மாருதி தாசன், திருப்பணிக்குழு தலைவர் பாண்டியன் மற்றும் தர்ம சேவா டிரஸ்ட் பக்தர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் பிரதான சிறப்பும் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar