பதிவு செய்த நாள்
17
செப்
2018
02:09
பொன்னேரி:பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, பழவேற்காடு கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, 13ம் தேதி, திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன.
நேற்று (செப்., 16ல்), விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பழவேற்காடு பகுதியில் உள்ள வங்காள விரிகுடா கடலில் கரைக்கப்பட்டன. பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பூச்சிஅத்திப்பேடு, தச்சூர், ஆரணி உட்பட, பல்வேறு பகுதிகளில் இருந்து, விநாயகர் சிலைகள், பழவேற்காடு கடலில் கரைக்கப்பட்டன.
பழவேற்காடு லைட்ஹவுஸ் குப்பம், பழைய சாட்டன்குப்பம், காட்டுப்பள்ளி என, பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.
காவல், வருவாய் மற்றும் தீயணைப்பு துறையினர்,பழவேற் காட்டில் முகாமிட்டு, பக்தர்கள் கொண்டு வந்த விநாயகர் சிலைகளை பாதுகாப்பாக கடலில் கரைப்பதற்கு ஒத்துழைப்பு அளித்தனர்.
விநாயகர் சிலைகளை கடலில் கரைத்த பின், பக்தர்கள் ஜாலியாக கடற்கரை அலைகளில் குளித்து விளையாடி மகிழ்ந்தனர். நேற்று, (செப்., 16ல்) மாலை 6:00 மணி வரை, பழவேற்காடு கடலில், 425 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.