பதிவு செய்த நாள்
18
செப்
2018
03:09
சேலம்: சேலத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ராஜகணபதி, கன்னிகா கணபதியாக நேற்று (செப்.,17ல்) அருள்பாலித்தார். சேலம், தேர்வீதியில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது. இங்கு, விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப் படும்.
இந்தாண்டுக்கான விழா கடந்த, 13 ல் துவங்கியது. ஐந்தாவது நாளான நேற்று(செப்., 17ல்) காலை, 6:00 மணி முதல் சிறப்பு பூஜை நடந்தது. பிறகு இளநீர், தயிர் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு கன்னிகா கணபதி அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. ஏராளமானோர், கோவிலுக்கு வந்து அருகம்புல், எருக்கமாலை ஆகியவற்றை வைத்து வழிபட்டனர்.