பதிவு செய்த நாள்
18
செப்
2018
03:09
சேலம்: சேலம் கோட்ட இந்து முன்னணி தலைவர் சந்தோஷ்குமார், டி.ஆர்.ஓ.,விடம், நேற்று (செப்., 17ல்) புகார்மனு அளித்தார். அதில், கூறியிருப்பதாவது: சேலம், குகை, காளியம்மன், மாரியம்மன் கோவிலில் கடந்த, 15, நள்ளிரவில் சமூக விரோத கும்பல், உண்டியலை உடைத்து, பணம், நகை திருடப்பட்டுள்ளது.
கோவிலுக்கு இரவு காவலரை ஏன் நியமிக்கவில்லை. பண்டிகை முடிந்து, உடனடியாக உண்டியல் பணம் எண்ணாமல், காலம் கடத்தியது எதற்காக. இதற்கு, செயல் அலுவலர் முழு பொறுப்பு. அவர் மீது, நடவடிக்கை எடுப்பதோடு, அலட்சியத்தால் நடந்த திருட்டுக்கு, மூன்றாண்டு காணிக்கையை கணக்கிட்டு, சராசரி தொகையை, செயல் அலுவலர் ஊதியத்தில் பிடித்தம் செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.