ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரத்தில் விஸ்வ கர்மா ஜெயந்திவிழாவின் மூன்றாம் ஆண்டு விழா நடந்தது. விஸ்வகர்மா, பிரம்ம தேவனின் உருவப்படத்திற்குமாலையணிவித்து, தீப விளக்கு களால் அலங்காரம் செய்யப்பட்டு,உலக நன்மைக்கான பிரார்த்தனை நடந்தது. கைவினைஞர்கள் சங்கத்தின் தலைவர் என்.கதிரேசன் தலைமை வகித்தார். சங்க துணைத்தலைவர் ஜெகநாதன், செயலாளர் புவனேந்திர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கணேசன் நன்றி கூறினார்.