பதிவு செய்த நாள்
04
பிப்
2012
11:02
தர்மபுரி: பாலக்கோடு தாலுகா காட்டம்பட்டி ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேதர ஸ்ரீசீனிவாச பொருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவம் மற்றும் மஹா நிவேதனம் உற்சவம் நேற்று (பிப்.,3) துவங்கி வரும் 7ம் தேதி நடக்கிறது.
காட்டம்பட்டியில் உள்ள ஸ்ரீசீனிவாச பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸம் செய்ய கோவில் டிரஸ்ட் மூலம் முடிவு செய்யப்பட்டு பவித்ராஸம் நடக்கிறது. கோவில் சன்னதியில் தெரிந்தும், தெரியாமலும் நாம் செய்யும் ஆராதனத்தில் ஏதேனும் தடையிருந்தால் அல்லது ஆராதனை காலங்களில் ஏதாவது தவறு ஏற்பட்டிருந்தால் அதற்கு பரிகாரமாக பவித்ரோஸ்வம் செய்யப்படுகிறது. பரிகார பூஜையால் பெருமாளின் ஸானித்யம் மேன்மேலும் அதிகமாகும். பெருமாளின் ஸானித்யம் மேன் மேலும் வளர்ந்து நிலைத்து நிற்கவும், கிராம மக்கள் நோய் நொடிகள் இல்லாமல் செல்வ செழிப்புடன் வாழவும் பவித்ர உற்சம், யாக பூஜைகள் நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை 8 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 6 மணிக்கு அங்குரார்பனம் (மிருத்ஸங்க்ரணம்) ஸோமகும்ப பிரதிஷ்டை, கங்கன பிரதிஸ்டை சாற்று முறை நடந்தது. இன்று (ஃபிப்.,4) காலை 8 மணிக்கு மஹா கும்ப பிரதிஷ்டை, மண்டல பிரதிஷ்டை, ஹோமம், பவித்ர மாலை சாற்றுதல், பூர்ணாஹுதி, சாற்று முறை கோஷ்டி நடக்கிறது. நாளை (ஃபிப்.,5) காலை 8 மணி மற்றும் மாலை 6 மணிக்கு ஹோமம், பூர்ணாஹுதி, சாற்று முறை கோஷ்டியும், 6ம் தேதி காலை 8 மணிக்கு ஹோமம், பூர்ணாஹுதி, சாற்று முறை கோஷ்டியும், மாலை 5 மணிக்கு பெருமாள் புறப்பாடு திரும்பியவுடன் ஹோமம், மஹா பூர்ணாஹுதியும், இரவு 8 மணிக்கு திருமஞ்சமன் தொடர்ந்து கும்ப புறப்பாடு, கும்ப புரோஷ்ணம், கங்கனவிஸர்சணம், தளிகை நிவேதனம், பெரிய சாற்று முறை, யதிகள், சம்பாவனை, கோஷ்டி நடக்கிறது. வரும் 7ம் தேதி காலை 8 மணிக்கு திருமஞ்சனமும், காலை 10.30 மணிக்கு மஹா நிவேதனமும், தொடர்ந்து திருப்பாவடை (அன்னாகூடம்) நடக்கிறது. கோவில் பூஜை குறித்தும் அறிய விரும்புவோர் கோவில் அர்ச்சகர் மொபைல்ஃபோன் 96261 61458 மற்றும் 04348 -241 988 என்ற டெலிஃபோன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஏற்பாடுகளை காட்டம்பட்டி ஸ்ரீசீனிவாச பெருமாள் கோவில் கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.