உளுந்தூர்பேட்டையில் சுவாமி விவேகானந்தர் எழுச்சி உரை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2018 12:09
உளுந்தூர்பேட்டை: சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடந்த உலக சர்வ சமய மகா சபையில் ஆற்றிய எழுச்சி உரையின் 125வது ஆண்டு விழா உளுந்தூர்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலய குருகுலத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு குருகுல தாளாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேம ப்ரியா அம்பா தலைமை தாங்கி மாணவர்களுக்கு ஆசியுரை வழங்கினார். விழாவில் ஆசிரம சகோதரிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்று கண்காட்சியினை குருகுல மாணவ, மாணவிகள் கண்டுமகிழ்ந்தனர்.