அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று (செப்.,19ல்) நடந்த தேரோட்டத்தை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.அவலூர்பேட்டையில் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ உற்சவம் நடைபெற்று வருகிறது. 7 ம் நாளான நேற்று செப்.,19ல் காலை சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் மாடவீதி வழியாக ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.