திருப்புவனம் முதுவன்திடலில் மொகரம்: தீ மிதித்து இந்துக்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2018 04:09
திருப்புவனம்: -சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு இந்துக்கள் முஸ்லிம் பள்ளிவாசல் முன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தீமையை எதிர்த்து நபிகள் நாயகம் போரிட்ட நாள் மொகரம் நாளாக அனுசரிக்கப்படுகிறது.
அன்றையநாளில் முஸ்லிம்கள் தங்களை வருத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். முதுவன்திடல் கிராமத்தில் விசேஷங்களுக்கு பாத்திமா பள்ளிவாசலுக்கு முதல்மரியாதை அளிக்கப்படுகிறது. மொகரம் பண்டிகைக்காக ஒரு வாரத்திற்கு முன்னதாக பள்ளிவாசல் முன் கொடியேற்றம் நடைபெறும். அன்றிலிருந்து ஆண்,பெண்கள் விரதமிருப்பர். ஆண்கள் மொகரம் பண்டிகையன்று அதிகாலை கண்மாயில் நீராடி பள்ளி வாசல் முன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர். பெண்கள் தலையில் முக்காடிட்டு அமர அவர்கள் தலையில் தீ கங்குகளை அள்ளி கொட்டுகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் நோய் நொடி தங்களை அண்டாது என நம்புகின்றனர். பின் சப்பர ஊர்வலம் நடைபெற்றது.முன்னதாக பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு முஸ்லிம் பெரியவர் திருநீறு பூசி ஆசி வழங்குவார்.