Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மும்பை மஹாராஷ்டிராவில், விநாயகர் சிலைகள் கரைப்பு மும்பை மஹாராஷ்டிராவில், விநாயகர் ... ஈரோட்டில் துறவறம் ஏற்கும் இளம்பெண் ஜெயின் சமூகத்தினர் மரியாதை ஈரோட்டில் துறவறம் ஏற்கும் இளம்பெண் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாளை மகாளயபட்சம் ஆரம்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2018
11:36

பித்ருக்களின் ஆசி கிடைக்கும் மகாளய பட்சம்: தட்சிணாயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசையும், உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் தை அமாவாசையும் முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இதனிடையே புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது. முன்னோர்கள் பூலோகம் வரும் மகாளய பட்சம் புரட்டாசி அமாவாசையன்று முடிவடையும். அதற்கு முந்திய பதினைந்து நாட்களும் மகாளய பட்ச காலமாகும். இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச்சிறந்ததாகும்.

மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த காலகட்டத்தில் வரும் பரணி, மஹாபரணி என்றும், அஷ்டமி, மத்பாஷ்டமி என்றும் திரயோதசி கஜச்சாயை என்றும் கூறப்படும். மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம் செய்ய முடியாதவர்கள் இந்தக் காலத்தில் தானங்களைச் செய்வதால் பன்னிரண்டு மாதங்களிலும் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

புராணங்களில் மகாளயபட்சம்: கருடபுராணம், விஷ்ணு புராணம், வராகபுராணம் போன்ற தெய்வீக நூல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. நாம் கலியுகத்தில் வாழ்வதால், அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசிவழங்குவதற் காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர். இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

இந்த பதினான்கு நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல், பழம் கொடுக்கலாம். ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எதுவும் செய்ய இயலாதவர்கள் முன்னோரின் பெயர்களை உச்சரித்து, "காசி காசி என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு கூட திதி பூஜையைச் செய்யலாம். பின்னர், பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.

காவேரிக் கரையோரம் ரங்கநாதர் அருள்புரியும் திருத்தலங்களும் சிறப்பானவை. அதில் தமிழ்நாட்டில் கயாவுக்கு சமமான புனித இடம் திருவாரூர் அருகிலுள்ள பூந்தோட்டம் என்னும் ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்திலுள்ள திலதர்ப்பணபுரி ஆகும். இங்கு மகாளய பட்ச பூஜை தர்ப்பணம் செய்தால் அவர்களின் பித்ருக்கள் நேரில் வந்து படையலைப் பெற்றுக் கொண்டு ஆசி வழங்குவதாக நம்பிக்கை. திவசமும் தர்ப்பணமும் செய்கிறபோது, பூலோகத்திலோ அல்லது வேறு எங்கோ எந்த உருவத்திலோ தங்கள் பாவ புண்ணியங்களுக்கேற்ப பிறந்திருக்கிற மூதாதையர்களுக்கு, இங்கே சிரார்த்தத்தில் கொடுக்கிற எள், தண்ணீர், பிண்டம், முதலானவற்றை பித்ரு தேவதைகள் அவர்கள் விரும்பும் உணவாக மாற்றி அங்கே கிடைக்கச் செய்வதாக சாஸ்திரம் சொல்லும். எனவே தீர்த்த சிரார்த்தமும், திவசமும், பித்ரு பூஜைகளும் நம்மையும் நம் வாரிசுகளையும் வளமுடன் வாழவைக்கும் என்பதில் ஐயமில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருப்பூர், பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர் திருவிழாவில், பக்தர்கள் ... மேலும்
 
temple
வடபழனி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, வடபழனி ஆண்டவர் கோவிலில், நேற்று லட்சார்ச்சனை ... மேலும்
 
temple
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா துவக்கமாக நேற்று ... மேலும்
 
temple
சென்னை: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், அறுபத்து மூவர் விழா, நேற்று வெகு விமரிசையாக ... மேலும்
 
temple
 பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்திருவிழா நடந்து வருகிறது. பத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.