செஞ்சி அருகாவூர் வன்னீஸ்வரர் கோவிலில் சிறப்பு வேள்வி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2018 12:09
செஞ்சி: அருகாவூர் வன்னீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் விரைவாக நடக்க சிறப்பு வேள்வி நடந்தது.
செஞ்சி அடுத்த அருகாவூரில் 500 ஆண்டுகள் பழமையான வன்னீஸ்வரர் கோவில் உள்ளது. சிதிலமடைந்து இருந்த இந்த கோவிலை பல லட்சம் ரூபாய் மதிப்பில் கிராம மக்கள் புதுப்பித்து வருகின்றனர்.
இந்த பணிகள் தடையின்றி நடக்கவும், உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு வேள்வி நடந்தது.
இதை முன்னிட்டு வன்னீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். 11 மணிக்கு கலச பிரதி ஷ்டை செய்து விசேஷ திரவியங்களை கொண்டு வேள்வி நடந்தினர். வடபுத்தூர் சைவவெறி திருத்தொண்டர் இளஞ்செழியன் தலைமையில் வேள்வி நடந்தது. இதில் திருப்பணிக் குழுவினர் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.