பதிவு செய்த நாள்
24
செப்
2018
12:09
பழநி: கோவில்களை இந்துக்களே நிர்வாகம் செய்யும் வகையில், தனி வாரியம் அமைக்க வேண்டும் என, தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழநியில் தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.
பின், மாநிலத் தலைவர் நாராயணன் கூறியதாவது:கிறிஸ்தவ ஆலயம், மசூதிகளை, அவர் களே நிர்வகிப்பது போல், கோவில்களையும் இந்துக்களே நிர்வகிக்கும் வகையில்,
அறநிலையத் துறையின் பிடியில் இருந்து மீட்டு, தனி வாரியம் அமைக்க அரசை வலியுறுத்து கிறோம்.கோவில்களில் திருடு போன சிலைகளை மீட்டுள்ள, தமிழக போலீசாரை பாராட்டுகிறோம்.
தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு, இந்து இயக்கங்கள் விரும்பும் இடத்தில் விழா நடத்த, அரசு அனுமதிக்க வேண்டும். பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா மீது வேண்டும் என்றே, பழிவாங்கும்
நோக்கத்துடன் பொய் வழக்குகள் தொடர்கின்றனர். அவற்றை, தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.மாநில பொதுச் செயலர் ஜெகநாதன், திண்டுக்கல்
மாவட்டத் தலைவர் ஹரிஹரமுத்து, நடிகர் டில்லி கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.