புதுச்சேரி வசந்த் நகர் குரு வேலாயுத ஈஸ்வரர் கோவிலில், குரு பூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2018 12:09
புதுச்சேரி: புதுச்சேரி வசந்த் நகர் குரு வேலாயுத ஈஸ்வரர் கோவிலில், 56வது குரு பூஜை விழா, வரும் 27ம் தேதி நடக்கிறது.
இதனையொட்டி, வரும் 26ம் தேதி காலை 7:30 மணிக்கு கோ பூஜை, காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து, 27ம் தேதி காலை 7:00 மணிக்கு கணபதி பூஜை, யாக பூஜையும், காலை 9:00 மணிக்கு திருவாசகம் விண்ணப்பம் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10:30 மணிக்கு மகா அபிஷேக ஆராதனை, மதியம் 12:30 மணிக்கு அன்னசேவை நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு சுவாமி திருமேனி வீதியுலா நடக்கிறது.ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.