பதிவு செய்த நாள்
24
செப்
2018
02:09
ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று முன்தினம், பக்தர்கள் (செப்., 22ல்)குவிந்தனர்.
காணிக்கை செலுத்த, மூன்று ஸ்ரீவாரி உண்டியல்களை கோவில் நிர்வாகம் வைத்தது. அன்றிரவே, உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அதில், 66 ஆயிரத்து, 592 ரூபாய் கிடைத்தது. அர்ச்சனை சீட்டு விற்பனையில், 11 ஆயிரத்து, 670 ரூபாய், திருவிழா நன்கொடை, 33 ஆயிரம் ரூபாய், சிறப்பு தரிசனம் டிக்கெட், 65 ஆயிரத்து, 730 ரூபாய் என, ஒரே நாளில், ஒரு லட்சத்து, 43 ஆயிரத்து, 425 ரூபாய் கோவிலுக்கு வசூலானதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.