பதிவு செய்த நாள்
06
பிப்
2012
11:02
சேர்ந்தமரம்:சேர்ந்தமரம் அருகே திருமலாபுரம் மலைமாதா ஆலய திருவிழா சப்பர பவனி நடந்தது.சேர்ந்தமரம் அருகே திருமலாபுரம் மலைமாதா திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பு திருப்பலி மற்றும் நற்கருணை ஆசீர்வாத நிகழ்வு, குணமளிக்கும் வழிபாடு நடந்தது. தொடர்ந்து மலைமாதா திருஉருவத்துடன் மலை உச்சியில் உள்ள மாதா ஆலயத்தை சுற்றி சப்பர தேர்பவனி நடந்தது.விழாவில் நெல்லை பிச்சுமணி குழுவினரின் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் அருட்தந்தையர்கள் ஜோமிக்ஸ், ஜேம்ஸ், தேவராஜன், சின்னப்பன், அருள்ராஜ், துரைராஜ், மரியதாஸ், வில்சன், விக்டர், லாரன்ஸ், ராபின், ஜேம்ஸ், பீகார் மாநிலம் ஜேம்ஸ், ஜோசப்ராஜ் மற்றும் சுற்றுவட்டார பங்கு மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை சேர்ந்தமரம் பங்குதந்தை அந்தோணி வியாகப்பன் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.