சிவகிரி:வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோயிலில் இன்று (6ம் தேதி) வருஷாபிஷேக விழா நடக்கிறது.வாசுதேவநல்லூரில் பிரசித்தி பெற்று விளங்கும் மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோயில் வருஷாபிஷேகம் நேற்று மாலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து பூர்ணாகுதி, முதல்கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது.இரண்டாவது நாளான இன்று (6ம் தேதி) காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, துர்க்கா ஹோமம், ஸ்ரீஸிக்தஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை மற்றும் காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு தொழிலதிபர் மகேந்திரன் உபயத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் ராமராஜா மற்றும் உபயதாரர்கள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.