தொண்டி அருகே பாசிபட்டினம் தர்கா சந்தனக்கூடு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2018 12:09
தொண்டி:தொண்டி அருகே பாசிபட்டினத்தில் சர்தார் நைனா முகமது ஒலியுல்லாதர்கா விழா 15ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம்(செப்., 25ல்) இரவு மத நல்லிணக்க சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது.
வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு மருங்கூர், எஸ்.பி.பட்டினம், வட்டாணம், கலியநகரி மற்றும் பல்வேறு கிராமங்கள் வழியாக சென்று நேற்று (செப்., 26ல்) அதிகாலையில் பாசிபட்டினம் தர்காவை சென்றடைந்தது.3 முறை வலம் வந்து தர்கா முன் நிறுத்தப்பட்டது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அக்டோபர் 10ந் தேதி கொடியிறக்கம் நடைபெறும்.