கர்நாடக முதல்வர் குமாரசாமி திருச்செந்தூரில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2018 11:09
தூத்துக்குடி, கர்நாடக முதல்வர் குமாரசாமி திருச்செந்தூரில் சூரசம்ஹார மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.அவர் நேற்று (செப்., 27ல்) காலை தனி விமானத்தில் தூத்துக்குடி வந்தார். அவரை முரளி ரம்பா எஸ்.பி., உதவி கலெக்டர் பிரசாந்த் வரவேற்றனர்.அங்கு குமாரசாமி கூறுகையில், கர்நாடகாவில் தாமரை ஆபரேஷன் குறித்து கவலை இல்லை. மாநில அரசியலில் நிச்சயமற்ற சூழல் இல்லை. எங்கள் ஆட்சி நீடிக்கும். எம்.எல்.ஏ., க்கள் எதிர்கட்சிகளுக்கு மாற இருப்பதாக கூறப்படுவது தவறு, என்றார். தொடர்ந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றார். மனைவி அனிதா, மகன் நிகின், ஜோதிடர் உடன் சென்றனர்.
சூரசம்ஹாரமூர்த்தி, வல்லபை விநாயகருக்கு பூஜைகள் செய்யப்பட்டன. காலை 10:45 மணி முதல் மதியம் 2:15 வரை கோயிலில் இருந்தார். தனது ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக சத்ரு சம்ஹார பூஜை செய்யப்பட்டது.