கூடலூர்: கூடலூரில் முத்தாலம்மன் கோயில் விழா கொண்டாடப்பட்டது. அம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
விழாவைத் தொடர்ந்து, அதிகாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மாலையில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
மேலும், சுவாமி வேடமிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கூடலூர் ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்கமும், விவசாய இளைஞர் அணியினரும் செய்திருந்தனர்.