சபரிமலையில் தினமும் 1 லட்சம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2018 10:10
திருவனந்தபுரம்; பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து சபரிமலையில் ஐயப்பன் தரிசனத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்க முடிவு செய்திருப்பதாக கேரள அரசு வட்டாரம் தெரிவிக்கிறது.உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து முதல்வர் பினராயிவிஜயன் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. நவம்பர் 16ல் சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது. அன்று முதல் 42 நாட்கள் பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிய துவங்குவர். இதில் பெண்களும் வந்தால் கூட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும். கடந்த காலங்களில் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பேர் வரை வந்துள்ளனர். கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் நெரிசல் ஏற்பட கூடுதல் வாய்ப்பு உள்ளது.எனவே ஒருநாளைக்கு ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசனத்திற்கு அனுமதிக்க கூடாது என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், சபரிமலையில் பக்தர்கள் தங்குவதற்கு வசதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.