காடுபட்டி: சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை துவங்கியது. இங்குள்ள சித்திர ரத வல்லபபெருமாள் கோயில் முன் சுயம்புவாக குருபகவான் கோயில் உள்ளது. அக்.,4 இரவு 10:05 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் இடம் பெயர்ச்சியாகிறார். இதனை முன்னிட்டு நேற்று காலை 10:35 மணிக்கு பட்டர்கள் ரங்கநாதர், ஸ்ரீதர், சடகோபன் குழுவினரால் குருபகவானுக்கு மலர்களால் லட்சார்ச்சனை நடந்தது. இன்று (அக்.,3)இரவு 8:00 மணி வரை லட்சார்ச்சனை நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ஜெயதேவி நிர்வாக அதிகாரி செந்தில்குமார் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.