மேலுார்: மேலுார் அருகே சூரக்குண்டில் சின்னடைக்கி, பெரியடைக்கி மற்றும் ஆண்டி அரசன் மகன் கோவில் புரட்டாசி திருவிழா நடந்தது. பெண்கள் பித்தளை கலயத்தில் பொங்கல் வைப்பதற்கான பூஜை பொருட்களை இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு குலவையிட்டபடி சுமந்து சென்றனர். அங்கு மழை பெய்து விவசாயம் செழிக்கவும், எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்து சார்பில் பொங்கல்வைக்கப்பட்டது. கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர். பெரியசூரக்குண்டு, சின்னசூரக்குண்டு, அய்யர்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.