கொழும்பு விநாயகருக்கு திருப்புத்தூர் வெட்டிவேர் மாலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2018 10:10
திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே குருவாடிப்பட்டியில் தயாரித்த வெட்டிவேர் மாலை இலங்கை நாட்டின் கொழும்பு விநாயகர் கோயிலுக்கு அனுப்பப்பட்டது. குருவாடிப்பட்டி வெட்டிவேர் ஆராய்ச்சிப் பண்ணையில் வெட்டிவேரால் மாலை தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரித்த 15 அடி உயர இரு நிலை மாலைகள் கொழும்பு செட்டியார் தெரு மாணிக்க பிள்ளையார் கோயில் தேரோட்டத்திற்கு அனுப்பப்பட்டது.
ஆராய்ச்சிப் பண்ணை நிர்வாகி பாண்டியன் கூறியதாவது:வெட்டி வேர் மூலிகை குணத்துடன் நல்ல நறுமணமும் தரும். இந்த மாலை விழா முடித்தவுடன் எடுத்து வைத்து, தொடர்ந்து நான்கு ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். திருமணத் தடை நீக்க சில கோயில்களில் வெட்டிவேர் மாலையை சுவாமிக்கு சூட்டுவர். வெட்டிவேர் மூலம் மாலை மட்டுமின்றி மருத்துவ, அலங்கார, வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கிறேன், என்றார்.