பதிவு செய்த நாள்
03
அக்
2018
01:10
திருத்தணி: அகத்தீஸ்வரர் கோவிலில், அஷ்டாஷ்க பைரவ (64 பைரவர்கள்) தனித்தனியாக, யாக சாலை அமைத்து, சிறப்பு பூஜைகள் நேற்று (அக்., 2ல்)நடந்தன. இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மூலவரை தரிசித்தனர்.திருத்தணி அடுத்த, நாபளூர் கிராமத்தில், காமா ட்சி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஒன்பது ஆண்டுகளாக, உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், 64 பைரவர்களுக்கு தனித்தனியாக யாக சாலை கள் அமைக்கப்பட்டு, சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டிற்காக, பைரவர்கள் சிறப்பு மகா யாக விழா, 30ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, கோவில் வளாகத்தில், 64 பைரவர்களுக்கும், தனித்தனியாக யாகசாலை மற்றும் கலசங்கள் அமைக்கப்பட்டன.நேற்று முன்தினம் (அக்.,1ல்), ருத்ர ஹோ மம், ரஷா பந்தனம் மற்றும் அகத்தீஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டன.
நேற்று (அக்., 2ல்) காலை, 64 பைரவர்களுக்கும், மகா வடுக யாக சாலை பூஜைகளை, 64 சிவாச் சாரியார்கள் நடத்தினர். அனைத்து கலசங்களும் ஊர்வலமாக புறப்பட்டு மூலவர் அகத்தீஸ் வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.தொடர்ந்து, மூலவர் காமாட்சி அம்பாளுக்கும், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இரவு, பைரவர்கள் மற்றும் உற்சவர் காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் வீதிஉலா வந்து, பக்தர் களுக்கு அருள்பாலித்தார். இதில், சென்னை, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மூலவரை வழிபட்டனர்.