சிறுவாபுரி முருகனை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2026 08:03
கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில், பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
செவ்வாய், ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவர். குறிப்பாக, செவ்வாய்க்கிழமைகளில் கட்டுக்கு அடங்காத பக்தர்கள் கூட்டம், சிறுவாபுரி முருகனை தரிசிக்க வருவர். நேற்று, சந்திரகிரகணத்தை முன்னிட்டு, மதியம் 2:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அதன்பின், இன்று காலை 6:00 மணிக்கு நடை திறக்கப்படும் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால், நாள் முழுதும் தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம், நேற்று மதியத்திற்குள் முருகனை தரிசிக்க வேண்டும் என, அதிகாலையிலேயே குவிந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில், ஐந்து மணி நேரம் காத்திருந்து முருகனை தரிசித்து சென்றனர்.