பதிவு செய்த நாள்
04
அக்
2018
12:10
மாமல்லபுரம்: மாமல்லபுரம், கடற்கரை சாலையில், தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழக, பூம்புகார் விற்பனையகம் இயங்குகிறது.
கைவினைத்தொழில் மேம்பாடு, கலை பொருட்கள் விற்பனைக்காக, இந்நிறுவனம், பண்டிகை கால கண்காட்சி நடத்துகிறது.தற்போது, நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கப்பட்டு, அக்., 20 வரை நடக்கிறது.
பல வகை பொருட்களில் தயாரித்த பொம்மைகள், சிலைகள், 10 சதவீத தள்ளுபடியில் வழங்கப்படுகின்றன.உலக நன்மைக்காக நவக்கிரக யாகம்காஞ்சிபுரம்: குரு பகவான், துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு, இன்று (அக்., 4ல்) பிரவேசிக்கிறார்.
இதையொட்டி, உலக நன்மைக்காக, சித்தர்கள் சிறப்பு தின விழா கூட்டமைப்பு சார்பில், காஞ்சிபுரம் பரமசிவம் தெருவில் உள்ள, காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதின மடத்தில், குருபெயர்ச்சி மற்றும் நவக்கிரக யாகம், நாளை நடைபெறுகிறது.
பரிகார ராசிகளான, மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு மற்றும் கும்ப ராசியினர், யாகத்தில் பங்கேற்று, பரிகார சங்கல்பம் செய்து கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.