பதிவு செய்த நாள்
04
அக்
2018
12:10
ஈரோடு: மூன்று கோவில்களில் உள்ள, 19 உண்டியல்களில் பக்தர்கள், ஆறு லட்ச ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் மற்றும் மகிமாலீஸ்வரர், கஸ்தூரி அரங்கநாதர் கோவில் ஆகிய மூன்று கோவில்களின் உண்டியல்கள், மூன்று மாதத்திற்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுகிறது. அதன்படி, நேற்று 3ல் மூன்று கோவில்களில் உள்ள, 18 உண்டியல்கள் மற்றும் ஒரு கோசாலை உண்டியல் என, மொத்தம், 19 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. மொத்தம், ஆறு லட்சத்து, 321 ரூபாய், தங்கம், 39 கிராம், வெள்ளி, 115 கிராம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சபர்மதி, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் கங்காதரன், ஈரோடு ஆய்வாளர் பாலசுந்தரி மற்றும் தேன்மொழி, தனியார் வர்த்தக நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டனர்.