சங்கராபுரம்:சங்கராபுரம் வள்ளலார் மன்றம் சார்பில் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் திருச் சபையில் வள்ளலாரின் 196 வது அவதார தினம் கொண்டாடபட்டது.மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், கால்நடை முதன்மை மருத்துவர் தமிழரசுனா, பி.டி.ஏ.தலைவர் குசேலன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி அமைப்பாளர் சூரியநாராயணன் வரவேற்றார்.மன்ற பூசகர் சிவஞான அடிகள், நடேசன் முன்னிலையில் அகவல் படித்து மழை வேண்டி பிரார்த்திக்கபட்டது.கார்த்திகேயன் சன்மார்க்க கொடி ஏற்றினார். ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி, பாலசுப்ரமணியன், அரிமா மாவட்ட தலைவர் விஜயகுமார், தலைமை ஆசிரியர் லட்சுமிபதி, ஆசிரியர்கள் மணி, பொன்னுசாமி, பாபு, சுரேஷ், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.