பதிவு செய்த நாள்
06
அக்
2018
11:10
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு அருகே பெருமாள்பட்டு கிராமம் உள்ளது. இங்குள்ள ருக்மணி தாயார் சமேத பாண்டுரங்க சுவாமி திருக்கோவிலில், 1917ல், முதல் சம்ப் ரோக்ஷணம் நடைபெற்றது.இதையடுத்து, 2007ம் ஆண்டு, மீண்டும் சம்ப்ரோக்ஷணம் நடந்தது. தினசரி பூஜைகள் மற்றும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.இக்கோவிலின் கிழக்கு, வடக்கு மூலையில் விநாயகர், தென்மேற்கு பகுதியில் ஐயப்பன், வடமேற்கு பகுதியில் ஆஞ்சநேயர் மற்றும் லட்சுமி, சரஸ்வதிக்கு தனி சன்னதிகள் உள்ளன.இந்த கோவில், வேப்பம்பட்டில் இருந்து ஒன்றரை கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
பூந்தமல்லியில் இருந்து, தடம் எண்: 54வி என்ற பேருந்து இயக்கப்படுகிறது.கோவில் நடை, தினமும் காலை, 6:00 மணி - 9:00 மணி வரையும், மாலை, 5:00 மணி - இரவு, 8:00 மணி வரை திறந்திருக்கும்.சனிக்கிழமையை ஒட்டி, இன்று (அக்.,6ல்) சிறப்பு பூஜை நடக்கிறது.