பதிவு செய்த நாள்
06
அக்
2018
11:10
பந்தலூர்:பந்தலூர் முருகன் கோவில் கட்டுமான பணியை முன்னிட்டு, சிறப்பு யாகம் நடந்தது. பந்தலூரில் உள்ள முருகன் கோவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக பரிகார பூஜைகள் செய்யப்பட்டது.இதன் நிறைவு பூஜை யை முன்னிட்டு, கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நடந்தது.மேலும், ரோகிணி, அஸ்தம் மற்றும் திருவோன நட்சத்திரகாரர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பூஜைகள் மற்றும் யாகத்தை நாராயணன் நம்பூதிரி தலைமையிலான குழுவினர் செய்தனர்.கோவில் கமிட்டி தலைவர் ஹரிராமன், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் சிவராஜ், ஆலோசகர் மகேந்திரன் மற்றும் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, திருநெல்லி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.