பதிவு செய்த நாள்
06
அக்
2018
11:10
விழுப்புரம்:திருவாமாத்தூர் முத்தாம்பிகை உடனாகிய அபிராமேஸ்வர பெருமான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.
விழுப்புரம் அருகே திருவாமாத்தூர் முத்தாம்பிகை உடனாகிய அபிராமேஸ்வர பெருமான் கோவிலில் நேற்று முன்தினம் (அக்., 4ல்) இரவு 10.05 மணிக்கு, துலாம் ராசியில் இருந்து குருபகவான் விருச்சிக ராசியில் பிரவேசிக்கும் குருபெயர்ச்சி விழா நடந்தது.
முன்னதாக கோவிலில் மாலை 5.00 மணிக்கு மங்கள இசை, 5.30க்கு குருபரிகார ஹோமங்கள், இரவு 8.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 10.05க்கு மகா தீபாராதனை நடந்தது.திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் (அக்., 4ல்) நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு அனுக்ஞை விக்னேஷ்வர பூஜை குருதட்சணாமூர்த்தி நவகிரக ஆவாகனம் பிரகஸ்பதி சாந்தி பரிகார ஹோமம் பூர்ணாஹூதி நடந்தது.மாலை 6:00 மணிக்கு மூலமந்திரம் ேஹாமங்கள் கடம் புறப்பாடாகி நவகிரக குரு குருதட்சணாமூர்த்திக்கு மகா அபிஷகம் சந்தனகாப்பு அலங்காரத்தில் இரவு 10:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. செஞ்சி: காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சியையொட்டி ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன் மற்றும் தட்சணா மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து தட்சணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இரவு 10.05 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிகம் ராசிக்கு குரு பிரவேசித்த நேரத்தில் மகா தீபாராதனை நடந்தது. இதேபோல் பீரங்கி மேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி: சிதம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் (அக்., 4ல்) மாலை கும்ப கலசம் வைத்து குருவை ஆவாஹனம் செய்து பூஜைகள் நடத்தினர். தொடர்ந்து யாகம் நடத்தப்பட்டது.
தட்சிணாமூர்த்திக்கும், நவக்கிரகங்களில் எழுந்தருளியுள்ள குருபகவானுக்கும், சிறப்பு அபிஷேகங்கள் செய்தனர். குரு சுகப்பெயர்ச்சி ஆன இரவு 10.05 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளுக்கு பூஜைகள் நடந்தது.மேலும் கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர், முடியனூர் அருணாசலேஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், தென்கீரனூர் அருணாசலேஸ்வரர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், தண்டலை சுயம்பு நாதேஸ்வரர், கள்ளக்குறிச்சி கங்கையம்மன், வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில்களில் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பரிகார அர்ச்சனைகள் நடந்தது.அவலூர்பேட்டை: அகத்தீஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் (அக்., 4ல்) மாலை 6;00 மணியிலிருந்து 7.30 , வரையில் குருபகவானுக்கு சிறப்பு மகா யாகம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இதே போல் அவலூர்பேட்டை பச்சையம்மன் கோவிலிலும் சிறப்பு யாகம் நடந்தது. சங்கராபுரம்:சங்கராபுரம் வாசவி கன்னிகா பரமேஸ்வர் அம்மன் கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு குருபகவானுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசன திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைகடலை மாலை அணிவித்து மகா தீபாராதனை நடந்தது.