பதிவு செய்த நாள்
06
அக்
2018
12:10
உத்தரகோசமங்கை:உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது.நேற்று (அக்.,5ல்) காலை 9:00 மணியளவில் மேதா தெட்சிணா மூர்த்திக்கு 21 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மஞ்சள் வஸ்திரம், மஞ்சள் பூக்கள், கொண்டைக்கடலை மாலையுடன் சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டது. பூஜைகளை குருக்கள் ரவி, விஸ்வநாதன் செய்தனர். ஏற்பாடுகளை சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன்,செயல் அலுவலர் ராமு, பேஷ்கார் ஸ்ரீதர் செய்தனர்.
* ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில், காகம் டிரஸ்ட் சார்பில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. இதில் மாலை 4:36 முதல் மஹாசங்கல்பம், சாந்தி பரிகார ஹோமங்கள், அர்ச்சனைகள், அபிஷேகங்கள் நடந்தது. இதில் காகம் டிரஸ்ட் நிறுவனர் எஸ்.ராஜலட்சுமி அருளுரை வழங்கினார். தர்மகர்த்தா கணேசஅடிகளார் வரவேற்றார். இதில் அரிமா கே.விவேகானந்தன், மின் வாரிய பொறியாளர் ஆர்.பாண்டியன், ஸ்டேட் பாங்க் அதிகாரி தனுக்கோடிராஜா பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை காகம் டிரஸ்ட் சீனிவாச சாஸ்திரி செய்திருந்தார். கடலாடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் (அக்.,4ல்) இரவு 10:05 மணியளவில் துலாம் ராசியிலிருந்து, விருச்சிகம் ராசிக்கு பிரவேசம் ஆனதை முன்னி ட்டு அபிஷேக ஆராதனைகளும் அர்ச்சனைகளும் செய்யப்பட்டது. இரவு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதானக் கமிட்டியினர் செய்தனர்.
* சாயல்குடி கைலாசநாதர் கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகளை ரவிச்சந்திரன் குருக்கள் செய்தார்.