பதிவு செய்த நாள்
10
அக்
2018
12:10
சேலம்: சேலம், சின்னதிருப்பதி, வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி தேர்த்திருவிழா எனும் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன், நேற்று முன்தினம் (அக்.,8ல்) தொடங்கியது. நேற்று (அக்.,9ல்) , சர்வ அலங்காரத்தில், ஹனுமந்த வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாளை (அக்.,11ல்) காலை, திருக்கல்யாண உற்சவம், வீதிஉலா நடக்கவுள்ளது. வரும், 13 மாலை, 5:00 மணிக்கு, தேரோட்டம் நடக்கிறது. 14ல் மஞ்சள் நீராட்டு உற்சவம், 15ல் கருடசேவையுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடையும்.