சின்னமனூர்:சின்னமனூர் நூலகத்தில் திருக்குறள் பண்பாட்டு இயக்கம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், திருக்குறள் தொடர் வகுப்பு நடந்தது. வாசகர் வட்ட தலைவர் நந்தகோபால் தலைமை வகித்தார். புலவர் மணி முன்னிலை வகித்தார்.
திருக்குறள் பண்பாட்டு இயக்க அமைப்பாளர் முத்துக்குமார் வரவேற்றார். ஆலோசகர் சேதுபதி, வக்கீல் சிவநந்தினி, வாசகர் வட்ட பொருளாளர் விஸ்வநாதன், ஆசிரியர் பாலசுப்ரமணியன், ஆசிரியர் அழகுமலை, எஸ்.ஐ., சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர் தங்கேஸ்வரன் கவிதை வாசித்தார். கடமலைக்குண்டு வாசகர் வட்ட தலைவர் சீனிவாசன் அழுக்காறாமை அதிகாரம் குறித்து பேசினார். திருக்குறள் பண்பாட்டு இயக்க செயலாளர் கற்பூர பூபதி நன்றி கூறினார். குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.