ஆண்டிபட்டி சபரிமலையில் பெண்கள் அனுமதி: மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2018 12:10
ஆண்டிபட்டி:சபரிமலையில் தியான நிலையில் இருக்கும் ஐயப்ப சுவாமி வழிபாட்டில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது, என, சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்பசுவாமி கோயில் நிறுவனர் முத்துவன்னியன் தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்ததாவது:தற்போது சபரிமலையில் 10 வயதிற்குட்பட்ட 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மட்டும் சென்று வரும் நிலை உள்ளது.இந்நிலையே மீண்டும் தொடர வேண்டும். அனைத்து பெண்களும் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கு சென்று வர அனுமதிக்ககூடாது.
இந்துக்களின் ஆகமம், சாஸ்திரம் மதிக்கப்பட வேண்டும்.சபரிமலை வழிபாட்டில் நான்கு படை இடங்களான குளத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன்கோயில், எரிமேலி ஆகியவற்றில் குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே பெண்களுக்கு அனுமதி வழங்கப் படுகிறது.
ஐந்தாம் படை வீடாக கருதப்படும் சபரிமலையில் அதுவும் இல்லை.அங்கு ஐயப்பசுவாமி பிரம்மச்சர்ய தியான விரதம் மேற்கொண்டுள்ளார். எனவே பெண்கள் செல்வதற்கான அனுமதிக்கு மறுத்து, மறு பரிசீலனை செய்ய வேண்டும்.பழைய நிலையே தொடர வேண்டும், என்றார்.